வியாழன், 10 நவம்பர், 2011

ஜன்னல்கள்

கூவம் ஆற்றை வெறுத்த நேரத்தினில்
சொச்சத்தை கூட கொடுக்கவேயில்லை இயற்கையை ரசிக்க
கூவும் வண்டியின் செயற்கை ஜன்னல்கள் !
ரசித்த சொச்ததையும் மறக்கவே செய்கிறது -
வினோத மனிதர்களின் விசித்திர வாழ்க்கை .

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

தமிழா ! தில்லித் தமிழா !

தமிழா ! தமிழா !
துண்டு பிரச்சாரம் வேண்டாம் இனி நமக்கிடையில்
தூண்டும் பிரச்சாரம் செய்திடுவோம் -தமிழனை தமிழ் படிக்க தூண்டும் பிரச்சாரம் செய்திடுவோம் !
வேற்றுமை வேண்டாம் நமக்கிடையில்- வெறருத்திடுவோம் வேற்றுமையை விதைப்பவர்களை நமக்கிடையில் !
மரபை மறந்திடவேண்டாம் -நம் மரபை
மார் தட்டிக்கொள்வோம் நாம் தமிழர் என்று !
வரும் தலைமை நமதென்றே போட்டியிடுவேம்
வந்த தலைமையும் நமதென்றே போற்றிடுவோம் !
இடம் பெயர்ந்து வந்தது நாம் மட்டும் அல்ல
நம்முடன் நம் தமிழும்தான் என்று ,
பறைசாட்டிக்கொள்வோம் உலக தமிழர்களுக்கெல்லாம் !
தமிழ் வளர்ப்போம் !
செந்தமிழ் வளர்ப்போம் !
செம்மொழி வளர்ப்போம்!

புதன், 4 பிப்ரவரி, 2009

தெய்வம்




என் வாழ்கை ஓட்டத்தின் நினைவு குதிரையின் கடிவாளத்தை பிடித்து நிறுத்தி சற்று இளைப்பாற விட்டுவிட்டு , பின்னோக்கி செல்கிறேன் முடிந்த வரை ஓட்டத்தின் துவக்க இடத்தை நோக்கி . மங்கலாய் தெரிகிறது .....இரண்டு வயது குழந்தையாய் ஏதும் புரியாமல் வீட்டு தாழ்வாரத்தில் கருப்பேரி கிடந்த முட்டுகொம்பை மிக ஜாக்ரதையாக செதில்கள் ஏதும் பிஞ்சு கைகளில் குத்தாமல் இருக்க பக்கத்தில் தொங்கிகொண்டிருந்த அப்பாவின் பழைய வேட்டியை அதன்மேல் படரவிட்டு இருக்கமாய் பிடித்துகொண்டிருக்கிறேன் இருகைகளாலும் பயம் கலந்த முகத்துடன் , இத்தனை பேரும் ஒன்று கூடி ஏன்என்னைவிட அதிகமாய் அழுகிறார்கள் என்று புரியாமல் . அத்தனை கூட்டத்திலும் அம்மா மட்டும் தெரிந்தால் , அவர் அழுவதை பார்த்து நான் அமைதியாக இருந்தேன் தினமும்போல் இல்லாமல் . மெல்ல மெல்ல தெரியவருகிறது என் தாத்தா இறந்துவிட்டாராம் . இதுதான் என் நினைவு ஓட்டத்தின் ஆரம்பாம் இதற்க்கு முன்னால் கருவறையிலிருந்து தாத்தா இறந்த தினம் வரை ஏதும் ஞாபகம் இல்லை . கருவறையில் இருந்த நாட்களின் ஞாபகம் வராமல் இருப்பதாலோ என்னவோ பலர் அம்மாவை தெய்வமாக நினைப்பதே இல்லை.


வெள்ளி, 30 ஜனவரி, 2009

நாங்க புதுசு நாடக குழு

நாங்க புதுசு நாடக குழு

ஞான யோகம்

"நாங்க புதுசு" நாடக குழுவின் மூன்றாம் படைப்பு . இளஞ்சோழன், வ.குமரன், ராமையன் , அபிநயா மற்றும் பல நடிகர்கள் நடித்தனர் . நாங்க புதுசு நாடக குழுவின் மூன்றாவது வெற்றி நாடகம் இதன் இயக்குனர் தி. பெரியசாமி மற்றும் இணை இயக்குனர்கள் வ. இளஞ்சோழன் , வ. குமரன் . டெல்லி வாழ் தமிழர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட நாடகம் .

ஞாயிறு, 15 ஜூன், 2008

மூன்றாம் தமிழில் மூவர் ( இ . பெ. கு.)


தலைநகர் டெல்லியில் டெல்லி தமிழர்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட நாடககுழு " நாங்க புதுசு நாடக குழு" இதன் நிறுவர்கள் வே. இளங்சோழன் ,தி . பெரியசாமி மற்றும் வ. குமரன் (இவர்கள் மூவருமே யதார்த்தா கி. பென்னேஸ்வரன் அவர்களின் சிஷ்யர்கள் ). எங்களின் முதல் படைப்பு " ஒரு விசாரணை "(தமிழில் மொழிபெயர்ப்பு திரு ஞானி அவர்கள்) இரண்டாம் படைப்பு "மூர் மார்க்கெட் "( ஆசிரியர் திரு .அறந்தை நாராயணன் அவர்கள் ) மூன்றாம் படைப்பு "ஞான யோகம்" ( ஆசிரியர் திரு . கேகே. ராமன் அவர்கள் ) மூன்று நாடகங்களும் டெல்லி வாழ்தமிழர்களால் பெரிதும் பாராட்டப்பட்டவை . இன்று பதிவு செய்யப்பட நாடக குழுவாக " நாங்க புதுசு நாடக குழு " டெல்லியிலே இயங்கிகொண்டிருகிறது என்பதில் பெருமகிழ்ச்சியாக உள்ளது .

நிர்வாகிகள்

தலைவர் : வே.இளங்சோழன்
துணை தலைவர் : ஆர் . ஷமீமுன்னிசா
செயலாளர் : வ. குமரன்
பொருளாளர் : தி. பெரியசாமி
இயக்குனர் : தி. பெரியசாமி
இணை இயக்குனர்கள் : வே. இளங்சோழன், வ. குமரன்
ஆலோசகர்கள் :திரு . ஆர்.ஷாஜகான், திரு . சேதுராமலிங்கம்